Lyrics
என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
பிறந்த கடனை அடைப்பேன்
உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
பிறந்த கடனை அடைப்பேன்
பாவம் தீர்க்க
ஒரு கேள்வி கேட்க
இங்கு தெய்வம் நேரில் வர வில்லை
பாவம் நேரம் அதற்கில்லை
குற்றவாளிகளின் கொட்டம் தீர
ஒரு சட்டம் ஒத்து வர வில்லை
தர்மம் செத்துவிட வில்லை
கட்டில் வேறு ஒரு தொட்டில் வேறு எனில்
என்னவாகும் உலகம்
சொந்தமில்லை ஒரு பந்தமில்லை இது
நாகரீக நரகம்
தந்தை யாரோ கானல் நீரோ
தாய்ப் பால் கூட கண்ணீரோ
உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
பிறந்த கடனை அடைப்பேன்
பெண்கள் யாரும்
இங்கு பெண்கள் இல்லை
அவர் எச்சில் துப்பும் ஒரு கிண்ணம்
என்று தானே உனதென்னம்
காலம் மாறியது
காட்சி மாறியது
பெண்மை ஆளுவது திண்ணம்
சீதை சாகவில்லை இன்னும்
போன ஜென்ம வினை
நாளை கொள்ளும்
அது அந்த நாளில் வழக்கம்
இந்த ஜென்ம வினை
இன்று கொள்ளும்
இது இந்த நாளில் பழக்கம்
கருவில் தானே வெளிச்சம் இல்லை
மண்ணில் வந்தும் ஒளி இல்லை
உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
பிறந்த கடனை அடைப்பேன்
உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்